கண்ணீரஞ்சலி
by
by ஸ்ரீதரன் - சிட்லபாக்கம்
(sridharan99@gmail.com)
( TMS என்னும் சகாப்தம் 22 Mar 1922 to 25-May-2013 )
TMS இரங்கற்பா
(மெட்டு : TMS பாடிய உள்ளத்தின் கதவுகள் கண்களடா)
______________
உள்ளத்தில் உன்குரல் ஒலிக்குதய்யா
அந்தக் குரல் இந்த காலத்தைக் கடந்ததய்யா
(2)
உள்ளத்தில் இனிக்குது அதுதேனு
எந்த உலகத்தில்இருக்குது அதற்கீடு
(2)
உள்ளத்தில் உன்குரல் ஒலிக்குதய்யா
அந்தக் குரல் இந்த காலத்தைக் கடந்ததய்யா
(MUSIC)
சாதல் என்பது ஒருகேடு அது இனிக்குமுன் குரலுக்குக் கிடையாது
(Short Music)
சாதல் என்பது ஒருகேடு அது இனிக்குமுன் குரலுக்குக் கிடையாது
காலன் விழைந்தான் இசை கேட்க
உனை அழைத்தே சென்றான் அதைப் பாட
உள்ளத்தில் உன்குரல் ஒலிக்குதய்யா
அந்தக் குரல் இந்த காலத்தைக் கடந்ததய்யா
உள்ளத்தில் இனிக்குது அது தேனு
எந்த உலகத்தில் இருக்குது அதற்கீடு
உள்ளத்தில் உன்குரல் ஒலிக்குதய்யா
அந்தக் குரல் இந்த காலத்தைக் கடந்ததய்யா
(MUSIC)
குரலுக்கு உருவம் கிடையாது உந்தன் குரலின்றி படமும் நகராது
(Short Music)
குரலுக்கு உருவம் கிடையாது உந்தன் குரலின்றி படமும் நகராது
உலகத்தில் உன்மெய் தெரியாது
என்றும் உன்குரல் மேன்மை மறையாது
உள்ளத்தில் உன்குரல் ஒலிக்குதய்யா
அந்தக் குரல் இந்த காலத்தைக் கடந்ததய்யா
உள்ளத்தில் இனிக்குது அது தேனு
எந்த உலகத்தில் இருக்குது அதற்கீடு
உள்ளத்தில் உன்குரல் ஒலிக்குதய்யா
அந்தக் குரல் இந்த காலத்தைக் கடந்ததய்யா
ம்..ஹ்ம்ம் .. ம்..ஹ்ம்ம் .. ம்..ஹ்ம்ம்
No comments:
Post a Comment