Sunday, 16 April 2017

6 யாராலும் உன்னிசையை மறக்க முடியுமா (பாவாடை தாவணியில்)**


( TMS என்னும் சகாப்தம் 22 Mar 1922 to 25-May-2013 )

***************




*******************



யாராலும் உன்னிசையை மறக்க முடியுமா அதைக் 
கேளாமல் எனக்கு-ஒரு நாளும் விடியுமா
யாராலும் உன்னிசையை மறக்க முடியுமா
வானோர்கள் அன்றமுதம் நாடியதேனோ
அவர்-உண்ட வானமுதே உன்னிசை தானோ
யாராலும் உன்னிசையை மறக்க முடியுமா
(MUSIC)
பாகென்று என்-உள்ளம் உருகுதே ஐயா காதில்
தேன்-என்று ஓர்-வெள்ளம் பெருகுதே ஐயா 
(2)
கள்ளென்றும் உண்ணாமல் மயங்குதே அய்யா
நீயும் இசையாக சுவையாக கொடுத்ததால் அய்யா 
யாராலும் உன்னிசையை மறக்க முடியுமா அதைக் 
கேளாமல் எனக்கு-ஒரு நாளும் விடியுமா
(MUSIC)
பக்தி-தரும் உன்னிசையின் பெருமை-கூறவா உன்
முத்தைத்-தரு பத்தித்-திருப் புகழைக்-கூறவா
(2)
 உன்-தமிழின் உச்சரிப்பே சொர்க்க-போகமே
என்றுலகம் மனம்-மகிழும் உனது-இசையிலே   
யாராலும் உன்னிசையை மறக்க முடியுமா அதைக் 
கேளாமல் எனக்கு-ஒரு நாளும் விடியுமா
(MUSIC)
ஐயே-நின் பூத-உடல் கிடந்து-பட்டாலும் நீ  
முருகனவன் திருவடியை அடைந்து-விட்டாலும்
ஐயன்-உனைத் தன்னருகே அழைத்துக்-கொண்டாலும் நான்
தினமுமுனை சிறந்த-உந்தன் இசையில் காணுவேன்
யாராலும் உன்னிசையை மறக்க முடியுமா அதைக் 
கேளாமல் எனக்கு-ஒரு நாளும் விடியுமா

யாராலும் உன்னிசையை மறக்க முடியுமா


No comments:

Post a Comment