மனது-பெரும் புண்ணாகி உழலுகின்றதிருக்கோ
T.M.S. இசை-மாரி பொழிந்த- பின்னர் இருக்கோ
(Short Music)
மனது-பெரும் புண்ணாகி உழலுகின்றதிருக்கோ
T.M.S. இசை-மாரி பொழிந்த-பின்னர் இருக்கோ பொழிந்த-பின்னர் இருக்கோ
காதுகளை பூப்போலே வருடுகின்ற குரலோ (2)
ஆநிரையும் மயங்கி-விடும் கண்ணன்-கொண்ட குழலோ
மனது-பெரும் புண்ணாகி உழலுகின்றதிருக்கோ
T.M.S. இசை-மாரி பொழிந்த-பின்னர் இருக்கோ பொழிந்த-பின்னர் இருக்கோ
(MUSIC)
கந்தருவக் குரலாலே தேவருக்கும்-இணையாக (2)
முருகனுக்கு இசைபாட தேர்ந்தெடுக்கப் பட்டவரோ
அவர்குரலில் நெஞ்சத்தை பறிகொடுத்து மொத்தத்தில் (2)
பைத்தியமாய் ஆனவர்க்கு வைத்தியமும் அது-தானோ
மனது-பெரும் புண்ணாகி உழலுகின்றதிருக்கோ
T.M.S. இசை-மாரி பொழிந்த-பின்னர் இருக்கோ
(MUSIC)
அமுதொழுகும் தமிழழகும் அதைப்-படிக்கும் குரலழகும்
இன்றும்-கணீர் என-ஒலிக்கும் சாந்தி-தரும் மாமருந்தோ
யாரிசைக்கும் மயங்காத தனிக்-கருத்து உடையவரும் (2)
இவரிசையில் மயங்காத பேர்-வழியாய் உள்ளனரோ
மனது-பெரும் புண்ணாகி உழலுகின்றதிருக்கோ
T.M.S. இசை-மாரி பொழிந்த-பின்னர் இருக்கோ
(MUSIC)
செந்தமிழில் சொல்லெடுத்து கவியரசர் கவி-தொடுத்து
தந்ததற்கு மாமன்னர் தந்த-இசைத் தேன்-தேன்-தேன்
அதன்-மேலும் அது-இனிக்க மிச்சம்-இல்லை என-இருக்க-(2)
அதை-மேலும் இனிக்க-வைத்தார் TMS-தன் குரலைக்-கொண்டே
மனது-பெரும் புண்ணாகி உழலுகின்றதிருக்கோ
T.M.S. இசை-மாரி பொழிந்த-பின்னர் இருக்கோ பொழிந்த-பின்னர் இருக்கோ
No comments:
Post a Comment