Monday, 17 April 2017

10. பாட்டும் நீயே(பாட்டும் நானே) ***

பாட்டும்-நீயே பாவமும்-நீயே

பாட்டும்நீ-யே பாவமும்நீ-யே யாரோ உனைப்-போல் பாட-வல்லாரே
(2)
பாட்டும் இசையும் பாட்டின் முறையும்
வாழும்-உன்னிடம் அதைச்-சொல்ல வந்தேனே
(2)
பாட்டும்நீ-யே பாவமும்நீயே யாரோ உனைப்-போல் பாட-வல்லாரே
பாட்டும் நீயே பாவமும் நீயே
(MUSIC)
எதையும் ..  எளிதில் இசைக்கும் .. நீயே

எதையும் எளிதில் இசைக்கும் நீயே
பாடும்க-லையில் நாயகன் நீயே
 (2)
இசையில் மயக்கும் உனக்கும் ஈடே (2)
என்றைக்கும்-உண்டா எவரும் உலகே
(Pause)
நா அசைத்தால் இசையே உனக்கு-எல்லாமே
(Short Music)
நா அசைத்தால் இசையே உனக்கு-எல்லாமே
இசையாய்ப் பொழிந்தாய்-நீ பாடலின்-தலைவா
(2)
அழகுராஜன்-எனும் பேரில்-வந்து-புவி கேட்கப் பாடல்பல பாடித்தந்த-திரு
 பாட்டும்-நீயே பாவமும்-நீயே யாரோ உனைப்-போல் பாட-வல்லாரே
பாட்டும் நீயே பாவமும் நீயே

ஜதி & Instumental

9. இசை என்றாலே(ஒளி மயமான)**

இசை-என்றாலே என்-உள்ளம் டீ எம்-எஸ்ஸை நினைக்கிறது
(Short Music)
அவர் குரலும் இசையும் வாழும்-வரையில் காதில் ஒலிக்குமது
இசை-என்றாலே என்-உள்ளம் டீ எம்-எஸ்ஸை நினைக்கிறது
(MUSIC)
யாருக்குத் தகவும் பாடலைப்-பாடி TMS-தருகின்றார் 
கதை நாயகன்-யாரும் போன்ற-குரலில் இவர் இசை பொழிகின்றார்
(Short Music)
யாருக்குத் தகவும் பாடலைப்-பாடி TMS-தருகின்றார் 
கதை நாயகன்-யாரும் போன்ற-குரலில் இவர் இசை பொழிகின்றார்
காலை-மாலை ரசிகர்கள்கா-தில் இசை-மழை பொழிகின்றார்
கூவி ஆடும் குழந்தையைப்-போலே அவர்அதில் நனைகின்றார் 
(Short Music)
இசை-என்றாலே என்-உள்ளம் டீ எம்-எஸ்ஸை நினைக்கிறது
எங்கணும் இலையே அவர்-குரல்போ-லே உலகினிலே இலையே
கந்த வேலனைப்-பாடும் பாடல்-போதும் அதற்கிலையே விலையே 
(1+Short Music+1)
தீந்தமிழ்ச் சொல்லை சுந்தரப்-பண்ணில் தருவதிலே-அவரை
போல யாரும் உளரோ-என்னும் புகழ்-மொழியும் உலகே
(Short Music)
இசை-என்றாலே என்-உள்ளம் டீ எம்-எஸ்ஸை நினைக்கிறது
அவர் குரலும் இசையும் வாழும்-வரையில் காதில் ஒலிக்குமது

இசை-என்றாலே என்-உள்ளம் டீ எம்-எஸ்ஸை நினைக்கிறது

முதல் பக்கம்

8. மனது-பெரும் புண்ணாகி(நிலவு ஒரு பெண்ணாகி)***

மனது-பெரும் புண்ணாகி உழலுகின்றதிருக்கோ
T.M.S. இசை-மாரி பொழிந்த- பின்னர் இருக்கோ
(Short Music)
மனது-பெரும் புண்ணாகி உழலுகின்றதிருக்கோ
T.M.S. இசை-மாரி பொழிந்த-பின்னர் இருக்கோ பொழிந்த-பின்னர் இருக்கோ
காதுகளை பூப்போலே வருடுகின்ற குரலோ (2)
ஆநிரையும் மயங்கி-விடும் கண்ணன்-கொண்ட குழலோ
மனது-பெரும் புண்ணாகி உழலுகின்றதிருக்கோ
T.M.S. இசை-மாரி பொழிந்த-பின்னர் இருக்கோ பொழிந்த-பின்னர் இருக்கோ
(MUSIC)
கந்தருவக் குரலாலே தேவருக்கும்-இணையாக (2)
முருகனுக்கு இசைபாட தேர்ந்தெடுக்கப் பட்டவரோ
அவர்குரலில் நெஞ்சத்தை பறிகொடுத்து மொத்தத்தில் (2)
பைத்தியமாய் ஆனவர்க்கு வைத்தியமும் அது-தானோ
மனது-பெரும் புண்ணாகி உழலுகின்றதிருக்கோ
T.M.S. இசை-மாரி பொழிந்த-பின்னர் இருக்கோ
(MUSIC)
அமுதொழுகும் தமிழழகும் அதைப்-படிக்கும் குரலழகும்
இன்றும்-கணீர் என-ஒலிக்கும் சாந்தி-தரும் மாமருந்தோ
யாரிசைக்கும் மயங்காத தனிக்-கருத்து உடையவரும் (2)
இவரிசையில் மயங்காத பேர்-வழியாய் உள்ளனரோ
மனது-பெரும் புண்ணாகி உழலுகின்றதிருக்கோ
T.M.S. இசை-மாரி பொழிந்த-பின்னர் இருக்கோ
(MUSIC)
செந்தமிழில் சொல்லெடுத்து கவியரசர் கவி-தொடுத்து
தந்தற்கு மாமன்னர் தந்த-இசைத் தேன்-தேன்-தேன்
அதன்-மேலும் அது-இனிக்க மிச்சம்-இல்லை என-இருக்க-(2)
அதை-மேலும் இனிக்க-வைத்தார் TMS-தன் குரலைக்-கொண்டே
மனது-பெரும் புண்ணாகி உழலுகின்றதிருக்கோ

T.M.S. இசை-மாரி பொழிந்த-பின்னர் இருக்கோ பொழிந்த-பின்னர் இருக்கோ

Sunday, 16 April 2017

7. பார் இந்த அழகை(யார் அந்த நிலவு)**

பார் இந்த-அழகை கேள் இந்தக்-குரலை
தேனோ இல்லை பாகோ-வெண்ணை தானோ-இந்தக் குரலில்
ஜாலம் செய்த பாவம்-கொண்டு யார் இன்று உலகில்
(1+Short Music+1)
(MUSIC)
காலையும் மாலையும் பாரினிலே-புதுச் சோதனை
கொஞ்சம் நஞ்சம் இல்லை-ஐயா அதன்-வேதனை
யாவுமே போக்கிடும் குரலை நீ-கேளாயோ
உன் நெஞ்சில் சோகம் மாறுவதை-நீ உணராயோ
ஓ ..ஓ
நெஞ்சில் சோகம் மாறுவதை .. நீ உணராயோ

பார் இந்த-அழகை கேள் இந்தக்-குரலை
தேனோ இல்லை பாகோ-வெண்ணை தானோ-இந்தக் குரலில்
ஜாலம் செய்த பாவம்-கொண்டு யார் இன்று உலகில்
 (MUSIC)
பாடிய பாடல்கள் முடிவதில்லை ஒரு-போதிலே 
அன்றும் இன்றும் கேட்கிறதே அது-காதிலே 
தெய்வமே மானிடன் போர்வையில் நீ-வந்தாயோ
வந்து சௌந்தர-ராஜன் போல-இசை நீ-தந்தாயோ
ஓ ..ஓ.. ஓ ..ஓ
(MUSIC)
பார் இந்த-அழகை கேள் இந்தக்-குரலை
தேனோ இல்லை பாகோ-வெண்ணை தானோ-இந்தக் குரலில்
ஜாலம் செய்த பாவம்-கொண்டு யார் இன்று உலகில்

பார்- சென்று உலகில்

6 யாராலும் உன்னிசையை மறக்க முடியுமா (பாவாடை தாவணியில்)**

( TMS என்னும் சகாப்தம் 22 Mar 1922 to 25-May-2013 )

***************

*******************

யாராலும் உன்னிசையை மறக்க முடியுமா அதைக் 
கேளாமல் எனக்கு-ஒரு நாளும் விடியுமா
யாராலும் உன்னிசையை மறக்க முடியுமா
வானோர்கள் அன்றமுதம் நாடியதேனோ
அவர்-உண்ட வானமுதே உன்னிசை தானோ
யாராலும் உன்னிசையை மறக்க முடியுமா
(MUSIC)
பாகென்று என்-உள்ளம் உருகுதே ஐயா காதில்
தேன்-என்று ஓர்-வெள்ளம் பெருகுதே ஐயா 
(2)
கள்ளென்றும் உண்ணாமல் மயங்குதே அய்யா
நீயும் இசையாக சுவையாக கொடுத்ததால் அய்யா 
யாராலும் உன்னிசையை மறக்க முடியுமா அதைக் 
கேளாமல் எனக்கு-ஒரு நாளும் விடியுமா
(MUSIC)
பக்தி-தரும் உன்னிசையின் பெருமை-கூறவா உன்
முத்தைத்-தரு பத்தித்-திருப் புகழைக்-கூறவா
(2)
 உன்-தமிழின் உச்சரிப்பே சொர்க்க-போகமே
என்றுலகம் மனம்-மகிழும் உனது-இசையிலே   
யாராலும் உன்னிசையை மறக்க முடியுமா அதைக் 
கேளாமல் எனக்கு-ஒரு நாளும் விடியுமா
(MUSIC)
ஐயே-நின் பூத-உடல் கிடந்து-பட்டாலும் நீ  
முருகனவன் திருவடியை அடைந்து-விட்டாலும்
ஐயன்-உனைத் தன்னருகே அழைத்துக்-கொண்டாலும் நான்
தினமுமுனை சிறந்த-உந்தன் இசையில் காணுவேன்
யாராலும் உன்னிசையை மறக்க முடியுமா அதைக் 
கேளாமல் எனக்கு-ஒரு நாளும் விடியுமா

யாராலும் உன்னிசையை மறக்க முடியுமா

Tuesday, 11 April 2017

5. பகல் முழுக்க சோறு தண்ணி(மணப்பாறை மாடுகட்டி)

பொன்னு போல-பல பாட்டுங்கய்யா 
ஒண்ணா-ரெண்டா அழகா பாடித் தந்தார் யாருங்கய்யா
என்னய்யா முழிக்கிற-ஒமக்கு எல்லா-உண்மைகளும் பாடிச்-சொல்வேன் கேளுங்கய்யா..
_________________________
பகல்-முழுக்க சோறு-தண்ணி ராத்திரியில் தூக்கம்-தள்ளி
இசை-பாடிக் குடுத்ததாரு சொல்லுங்கண்ணே
அது இசை தெய்வம் என்கிற-TMS தானுங்கண்ணே
பகல்-முழுக்க சோறு-தண்ணி
ராத்திரியில் தூக்கம்-தள்ளி
பகல்-முழுக்க சோறு-தண்ணி ராத்திரியில் தூக்கம்-தள்ளி
இசை-பாடிக் குடுத்ததாரு சொல்லுங்கண்ணே
அது இசை தெய்வம் என்கிற-TMS தானுங்கண்ணே
 நடிப்போரைப் பொறுத்து நல்லா
நடிப்போரைப் பொறுத்து-நல்லா ஏத்தி-எறக்கிக் குரல-மாத்தி (2)

மூச்சப் புடிச்சு படிச்ச-பாட்டு கேளுங்கண்ணே
பாடல்லே நடிச்சிருக்கார் குரலுக்குள்ளே பாருங்கண்ணே
(2)
படத்த ஃபுல்லா தெரிஞ்சுக்கிட்டு கருத்த-நல்லாப் புரிய-வச்சு (2)
பொருத்தமாக இசை-படிச்சது யாருங்கண்ணே
அய்யா TMS-போல தமிழ்-படிச்சது யாருங்கண்ணே
என்னண்ணே இப்பிடி முழிக்கறே நம்ம TMS தாண்ணே

படத்த ஃபுல்லா தெரிஞ்சுக்கிட்டு கருத்த-நல்லாப் புரிய-வச்சு
பொருத்தமாக இசை-படிச்சது யாருங்கண்ணே
அய்யா TMS-போல தமிழ்-படிச்சது யாருங்கண்ணே

சுதியைக்-கூட்டிப் பாடுகையில்  அண்ணாச்சி தொண்டையிலே
ஆ..
சுதியைக்-கூட்டிப் பாடுகையில்  அண்ணாச்சி தொண்டையிலே

ஒலிக்கும்-குரலில் அமுதும்-தேனும் ஒண்ணுக்கொண்ணு
கலந்து ஊத்தறாப்ல இனிக்கும்-காதில் கேளுங்கண்ணே
(2)
கேட்ட-பாட்டை பலதரம்-நான் கேட்டிருக்கேன் ஆயிரம்-நாள்
ஆனா-அலுப்பு தட்டல-பாரு என்னைக்கும்ணே
கேப்பேன் ஆனா-அலுப்பு தட்டல-பாரு இன்னைக்கும்ண்ணே
நீயும் கேட்டுப்-பாரு ஒனக்கும்-கூட தோணுமண்ணே

கேட்ட-பாட்டை பலதரம்-நான் கேட்டிருக்கேன் ஆயிரம்-நாள்
ஆனா-அலுப்பு தட்டல-பாரு என்னைக்கும்ணே
நீயும் கேட்டுப்-பாரு ஒனக்கும்-கூட தோணுமண்ணே (2)

பகல்-முழுக்க சோறு-தண்ணி ராத்திரியில் தூக்கம்-தள்ளி
பகல்-முழுக்க சோறு-தண்ணி ராத்திரியில் தூக்கம்-தள்ளி
இசை-பாடிக் குடுத்ததாரு சொல்லுங்கண்ணே
அது இசை தெய்வம் என்கிற-TMS தானுங்கண்ணே

அந்த இசை தெய்வம் எங்களின்-TMS தானுங்கண்ணே

Friday, 7 April 2017

4. பாட்டா அனுதினம்(பார்த்தா பசுரம்)

Thanks to Ullagaram Ravi for singing this song wonderfully. 
Please visit his 
you tube channel
______________

பாட்டா அனுதினம் கொடுத்துச்-சென்றார் ஆயிரம் (2)
கேட்டா முடிக்கத்-தோணுமா பாரில்-யாருமே TMS-போல் பாடமுடியுமா
பாட்டா அனுதினம் கொடுத்துச்-சென்றார் ஆயிரம்
கேட்டா முடிக்கத்-தோணுமா பாரில்-யாருமே TMS-போல் பாடமுடியுமா
பாரில்-யாருமே TMS-போல் பாடமுடியுமா
(MUSIC)
கஷ்டமென்ன வேடிக்கையாய் பாடிப்-போடுவார்
எட்டு கட்டையிலும் பாடிடுவார் கேட்டுக்கோ அம்மா
(2)
எந்த-பாட்டும் பாடிடுவார் வார்த்தை-சுத்தமா (2)
நீயும் கேட்டு-விட்டா வேற-எதையும் கேக்கத்-தோணுமா (2)
பாட்டா அனுதினம் கொடுத்துச்-சென்றார் ஆயிரம்
கேட்டா முடிக்கத்-தோணுமா பாரில்-யாருமே TMS-போல் பாடமுடியுமா
பாரில்-யாருமே TMS-போல் பாடமுடியுமா
(MUSIC)
பொங்கும்-மனசைப் பாட்டில்-கட்டி போட்டிடுவாரு
(Short Music)
பொங்கும்-மனசைப் பாட்டில்-கட்டி போட்டிடுவாரு
இவரு கோடி-ஜனத்தை பாட்டு-பாடி மயக்கிடுவாரு
(2)
சோகப்-பாட்டு பாடும்போது அழுகையைப் பாரு (2)
வேகப் பாட்டை-கணத்தில் பாடி-நம்மைச் சிரிக்க-வைப்பாரு
எந்த பாட்டும்-எளிதில் பாடிடுவார் TMS சாரு
பாட்டா அனுதினம் கொடுத்துச்-சென்றார் ஆயிரம்
கேட்டா முடிக்கத்-தோணுமா பாரில்-யாருமே TMS-போல் பாடமுடியுமா
பாரில்-யாருமே TMS-போல் பாடமுடியுமா
(MUSIC)
அறுமுகனை அவரு-போல பாட-முடியுமா
யுகம்-ஆயிடுமே கேக்குறதுக்கு அத்தனை-இருக்குமா
(2)
பத்தவில்லை வேணுமின்னும் பாடச் சொல்லுமா (2)
அந்த சாமி-கிட்டே அவரைத்-திருப்பி அனுப்ப-சொல்லு மா (2)
பாட்டா அனுதினம் கொடுத்துச்-சென்றார் ஆயிரம்
கேட்டா முடிக்கத்-தோணுமா பாரில்-யாருமே TMS போல் பாடமுடியுமா

பாரில்-யாருமே TMS போல் பாடமுடியுமா

Thursday, 6 April 2017

3 இதயம் பெரும் இதமும் பெறும்(இரவு வரும் பகலும் வரும்)

Thanks to Ullagaram Ravi for singing this song wonderfully. 
Please visit his 
you tube channel
______________

இதயம்-பெரும் இதமும்-பெறும் உனது இசையில்-தான்
மனது-பெரும் அமைதி-பெறும் உனது இசையில்-தான் உனது இசையில்-தான்
(2)
(Short Music)
கனிவு-தரும் இனிமை-வரும் உனது இசையில்-தான்
கனிவு-தரும் இனிமை-வரும் உனது இசையில்-தான் உனது இசையில்-தான்
வருடித்-தரும் சுகமும்-வரும் உனது இசையில்-தான் உனது இசையில்-தான்
இதயம்-பெரும் இதமும்-பெறும் உனது இசையில்-தான்
மனது-பெரும் அமைதி-பெறும் உனது இசையில்-தான் உனது இசையில்-தான்
(MUSIC)
இளைஞருக்கும்-முதியவர்க்கும் உனது இசையில்-தான் உனது இசையில்-தான்
(1+SM+1)
பிடிப்பிருக்கும் துடிப்பிருக்கும் உனது இசையில்-தான் உனது இசையில்-தான்
இதயம்-பெரும் இதமும்-பெறும் உனது இசையில்-தான்
மனது-பெரும் அமைதி-பெறும் உனது இசையில்-தான் உனது இசையில்-தான்
(MUSIC)
விழியிரண்டில் பெருகும்-நீரும் உனது இசையில்-தான் உனது இசையில்-தான்
(1+SM+1)
வழியுமதைத் துடைப்பதுவும் உனது இசையில்-தான்
வழியுமதைத் துடைப்பதுவும் உனது இசையில்-தான் உனது இசையில்-தான்
இதயம்-பெரும் இதமும்-பெறும் உனது இசையில்-தான்
மனது-பெரும் அமைதி-பெறும் உனது இசையில்-தான் உனது இசையில்-தான்
இதயம்-பெரும் இதமும்-பெறும் உனது இசையில்-தான்

உனது இசையில்-தான்

Wednesday, 5 April 2017

2. என்றும் உன்னிசைத்-தேனே(உள்ளம் என்பது ஆமை)

கண்ணீரஞ்சலி
by
by ஸ்ரீதரன் - சிட்லபாக்கம் 
(sridharan99@gmail.com)

( TMS என்னும் சகாப்தம் 22 Mar 1922 to 25-May-2013 )
TMS இரங்கற்பா
(மெட்டு : TMS பாடிய உள்ளம் என்பது ஆமை)
*************

Thanks to Ullagaram Ravi for singing this song wonderfully. 
Please visit his 
you tube channel
______________

****************

என்றும் உன்னிசைத்-தேனே
(Short Music)
அதைக்-கேட்டே மயங்குது-பாரே
(Short Music)
என்றும் உன்னிசைத்-தேனே அதைக்-கேட்டே மயங்குது-பாரே
பண்ணில் கிடைப்பது-பாதி நீயும்-பாடிக் கொடுப்பது-மீதி (2)
என்றும் உன்னிசைத்-தேனே அதைக்-கேட்டே மயங்குது-பாரே
(MUSIC)
என்றும்-பண்ணாய்-அது கேட்கும் அது எது-என்றால்-உன் குரல்-தான் (2)
நன்றென்றால் குரல்-ஒன்று என்றும்-ஐயா உனதென்று
இல்லை-ஐயா பிறிதில்லை
என்றும் உன்னிசைத்-தேனே அதைக்-கேட்டே மயங்குது-பாரே
(MUSIC)
கண்ணீர் புனல்-போல் பெருகும் என்-மனமுன் இசையால் உருகும் (2)
உன்-குரல் இசை-மழை பொழியும் அத..னால்-பல நெஞ்சங்கள் நனையும் (2)
பலப்பல நெஞ்சங்கள் நனையும்
என்றும் உன்னிசைத்-தேனே அதைக்-கேட்டே மயங்குது-பாரே
பண்ணில் கிடைப்பது-பாதி நீயும்-பாடிக் கொடுப்பது-மீதி

என்றும் உன்னிசைத்-தேனே அதைக்-கேட்டே மயங்குது-பாரே

முதல் பக்கம்

1. உள்ளத்தில் உன்குரல்(உள்ளத்தின் கதவுகள் கண்களடா)

கண்ணீரஞ்சலி
by
by ஸ்ரீதரன் - சிட்லபாக்கம் 
(sridharan99@gmail.com)
( TMS என்னும் சகாப்தம் 22 Mar 1922 to 25-May-2013 )
TMS இரங்கற்பா

(மெட்டு : TMS பாடிய உள்ளத்தின் கதவுகள் கண்களடா)

Thanks to Ullagaram Ravi for singing this song wonderfully. 
Please visit his 
you tube channel

______________

உள்ளத்தில் உன்குரல் ஒலிக்குதய்யா
அந்தக் குரல் இந்த காலத்தைக் கடந்ததய்யா
(2)
உள்ளத்தில் இனிக்குது அதுதேனு
எந்த உலகத்தில்இருக்குது அதற்கீடு
(2)
உள்ளத்தில் உன்குரல் ஒலிக்குதய்யா
அந்தக் குரல் இந்த காலத்தைக் கடந்ததய்யா
(MUSIC)
சாதல் என்பது ஒருகேடு அது இனிக்குமுன் குரலுக்குக் கிடையாது
(Short Music)
சாதல் என்பது ஒருகேடு அது இனிக்குமுன் குரலுக்குக் கிடையாது
காலன் விழைந்தான் இசை கேட்க
உனை அழைத்தே சென்றான்  அதைப் பாட
உள்ளத்தில் உன்குரல் ஒலிக்குதய்யா
அந்தக் குரல் இந்த காலத்தைக் கடந்ததய்யா
உள்ளத்தில் இனிக்குது அது தேனு
எந்த உலகத்தில் இருக்குது அதற்கீடு
உள்ளத்தில் உன்குரல் ஒலிக்குதய்யா
அந்தக் குரல் இந்த காலத்தைக் கடந்ததய்யா
(MUSIC)
குரலுக்கு உருவம் கிடையாது உந்தன் குரலின்றி படமும் நகராது
(Short Music)
குரலுக்கு உருவம் கிடையாது உந்தன் குரலின்றி படமும் நகராது
உலகத்தில் உன்மெய் தெரியாது
என்றும் உன்குரல் மேன்மை மறையாது
உள்ளத்தில் உன்குரல் ஒலிக்குதய்யா
அந்தக் குரல் இந்த காலத்தைக் கடந்ததய்யா
உள்ளத்தில் இனிக்குது அது தேனு
எந்த உலகத்தில் இருக்குது அதற்கீடு
உள்ளத்தில் உன்குரல் ஒலிக்குதய்யா
அந்தக் குரல் இந்த காலத்தைக் கடந்ததய்யா

ம்..ஹ்ம்ம் .. ம்..ஹ்ம்ம் .. ம்..ஹ்ம்ம்