Wednesday, 5 January 2022

11. உந்தன் குரலுக்கு உள்ளே(தங்கப்பதக்கத்தின் மேலே)

உந்தன் குரலுக்கு உள்ளே 
ஒரு வெண்கலம் உள்ளது என்றே
பலர் சொல்லிடுகின்றதும் என்னே
அவர் சொல்லுவதும் உண்மை தானோ
அந்த  வெண்கலம் உன் குரல் தானோ
ஆ..
உந்தன் குரலுக்கு உள்ளே 
ஒரு வெண்கலம் உள்ளது என்றே
பலர் சொல்லிடுகின்றதும் என்னே
அவர் சொல்லுவதும் உண்மை தானோ
அந்த  வெண்கலம் உன் குரல் தானோ
(MUSIC)

தெள்ளுத் தமிழ்ச்சொல் பாடல்களை நீ உச்சரிக்கும் விதம் கண்டு  (2)
ஒரு பாடலேனும் ஆசை-கொண்டு பாட முயன்றவர் உண்டு (2)
அவர்கள் மனதில் இசையின் விதையை விதைத்தவன் நீயே
இசையின் மழையைப் பொழியும் மேகக் குரலைக் கொண்டோனே 
உந்தன் குரலுக்கு உள்ளே 
ஒரு வெண்கலம் உள்ளது என்றே
பலர் சொல்லிடுகின்றதும் என்னே
அவர் சொல்லுவதும் உண்மை தானோ
அந்த  வெண்கலம் உன் குரல் தானோ
(MUSIC)

உன்னால் இயலாத நல்லிசை மெட்டு ஒன்று இருக்குதா என்ன
உன்னால் இயலாத நல்லிசை மெட்டு என்று இருக்குதா என்ன
எனப் பாடல் இசையைப் போடும் பலரும் சொல்லிப்  புகழ்வதும் என்ன 
எனப் பாடல் இசையைப் போடும் பலரும் சொல்லி மகிழ்வதும் என்ன
ரசிகர் மனதை உனது இசையில் மயங்க வைத்தாயே 
குரலில் அமுதம் கொடுத்து அதனைக் கிறங்க வைத்தாயே 
உந்தன் குரலுக்கு உள்ளே 
ஒரு வெண்கலம் உள்ளது என்றே
பலர் சொல்லிடுகின்றதும் என்னே
அவர் சொல்லுவதும் உண்மை தானோ
அந்த  வெண்கலம் உன் குரல் தானோ
(MUSIC)

உன்னோடு நீ கொண்ட தங்கக் குரலும் சென்று மறைந்திடவில்லை
(MUSIC)
உன்னோடு நீ கொண்ட தங்கக் குரலும் சென்று மறைந்திடவில்லை
அது நாளும் பொழுதும் காதில் ஒலித்து அள்ளித் தெளிக்குது தேனை (2)
தேனும் பாலும் போல உந்தன் இசை தெவிட்டாது (2)
பல காலம் அதைக் கேட்ட பின்னும் மனம் சலிக்காது (2)    
உந்தன் குரலுக்கு உள்ளே 
ஒரு வெண்கலம் உள்ளது என்றே
பலர் சொல்லிடுகின்றதும் என்னே
அவர் சொல்லுவதும் உண்மை தானோ
அந்த  வெண்கலம் உன் குரல் தானோ
ஆ.